ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 36 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகள், பரிசோதனை விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழகத்தில், நேற்று ஒரேநாளில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 21 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 3 பேருக்கும், திருச்சியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிக்கா நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சத்து 54 ஆயிரத்து 722 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. அதே நேரம், தொற்றால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 25 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில், நேற்று 321 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து, நேற்று 392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம், 34 லட்சத்து 16 ஆயிரத்து 376 பேர் குணம் அடைந்து உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.