தமிழகத்தில் கொரோனா தொற்று: நேற்றைய நிலவரம் என்ன?

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2022-05-11 00:45 GMT

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக சென்னை 23 பேர், செங்கல்பட்டு 6 பேர், கோவை 2, திண்டுக்கல் , திருவள்ளூர், சேலம், நாகை, கிருஷ்ணகிரி, ராணிபேட்டை, திருச்சி தலா 1 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 28 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

நேற்று மொத்தம் 12,231 பேருக்கு, தொற்று பரிசோதனை நடைபெற்றது. தற்போது, வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 441 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 53 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பினர். நேற்று, கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News