ஒமிக்ரானை தடுக்க இரவில் முழு ஊரடங்கு: அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்

ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாட்டில் முதல் மாநிலமாக, மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

Update: 2021-12-24 01:30 GMT

கோப்பு படம் 

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில், இரவு 11 முதல், காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என்ற போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஒமிக்ரானுக்காக இரவு நேர ஊரடங்கை பிறப்பித்த முதல் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும். 

Tags:    

Similar News