பள்ளியில் 13 மாணவர்களுக்கு கொரோனா: பயப்பட வேண்டாம் என்கிறார் மா.சு.
திருப்பூர் அருகே, 13 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து பயப்பட வேண்டாம் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியதாவது: கடந்த 28ஆம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில், விடுதியில் தங்கி பயிலும் பள்ளியில், இரு 2 மாணவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், அங்குள்ள 115 மாணவர்களுக்கும் கோவிட்19 பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், அந்த விடுதி பள்ளியில் படிக்கும் 13 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த மாணவர்களை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் நிலையில் அறிகுறிகள் தென்பட்டதால், இதுகுறித்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.
அதுமட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் உரிய சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதோடு, உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.