தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா, 27 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டள்ளது. 27 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. :
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,41,168 ஆக உயர்ந்துள்ளது..
27 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 33,809 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு நாளில் மட்டும் 2,423 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 24,81,20 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 26,158 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.