இந்தியாவில் கொரோனாவுக்கு புதியதாக 2706 பேர் பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனாவுக்கு புதியதாக 2706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 25 பேர் உயிரிழந்துள்ளனர்.;
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த கொரோனாவுக்கு புதியதாக 2706 பேர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,55,749 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில், தொற்றுக்கு புதிதாக 25 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,611 ஆக உயர்ந்தது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 2,070 பேர் குணமடைந்ததன் மூலம், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,13,440 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,698 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாட்டில் 1,93,31,57,352 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,28,823 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.