ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு
வரும் மார்ச் 31ம் தேதியுடன் அனைத்துவிதமான கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியதும், அவை படிப்படையாக விலகிக் கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. எனவே, பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் விதித்துள்ள கொரோனா கட்டுபாட்டு விதிகளை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.
வரும் 31ம் தேதியுடன், கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கிவிடலாம். எனினும், சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.
மேலும், கொரோனா பரவல் இன்னமும் இருக்கும் பகுதிகலில், கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.