தமிழகத்தில் இன்று புதியதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-28 16:00 GMT

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 56 பேருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 33 பேர், செங்கல்பட்டில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 31 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை. 13 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன. தமிழகத்தில், எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News