தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, எண்ணிக்கை நிலவரம் என்ன?

மதுரை மாவட்டத்தில், நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-27 23:30 GMT

மதுரை மாவட்டத்தில், நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91043- ஆக உயர்ந்துள்ளது . இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 89804- ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1236 இருக்கிறது. இன்று 3 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்ற்னர். 

விருதுநகர் மாவட்டத்தில், நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56837- ஆக உயர்ந்துள்ளது.  நேற்று, ஒருவர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 56280- ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு இல்லை. நேற்று, 3 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

தேனி மாவட்டத்தில், நேற்று தொற்று எண்ணிக்கை புதிதாக இல்லை. அதேபோல் உயிரிழப்பும்  இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 533- ஆக இருக்கிறது. நேற்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

திண்டுக்கல் மாவட்டத்தில், நோய் தொற்று எண்ணிக்கை புதிதாக இல்லை. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37479-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 36813-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 665 இருக்கிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில், நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64964- ஆக உயர்ந்துள்ளது.  நேற்று, ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 64513- ஆக அதிகரித்துள்ளது . உயிரிழப்புகள் ஏதும் இல்லை. நேற்று, 3 பேர் கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News