இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,628 பேருக்கு தொற்று பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,628 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-05-26 04:00 GMT

இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பு 2,628 ஆக அதிகரித்துள்ளது. முந்தைய நாளில் இது, 2,124 ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,31,42,192 என்ற எண்ணிக்கையில் இருந்து, 4,31,44,820 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 2,167 பேர், பெறுந்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,04,881 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் , கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை, 5,24,525 பேர் ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 13,13,687 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தம் 192.82 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News