தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா, 8 ஆயிரத்தை நெருங்கியது, 29 பேர் பலி: மீண்டும் ஊரடங்கா அரசு ஆலோசனை
தமிழகத்தை கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் நோய் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 15ம் தேதி நேற்று ஒரே நாளில் மட்டும் 7,987 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நேற்று ஒரேநாளில் மட்டும் 29 பேர் இறந்துள்ளனர். இன்று தலைமை செயலாளர் ராஜூவ் ரஞ்சன் தலைமையில் அரசு அவரச ஆலோசனையில் ஈடுபடுகிறது. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறதா என்கிற பயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.;
தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் நேற்று (15ம் தேதி) மட்டும் ஒரே நாளில் புதியதாக 7,987 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.அதிக பட்சமாக சென்னையில் 2,558 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 91 ஆயிரத்து 839 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4,176 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். 58,097 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 29 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவால் தமிழகத்தில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தீவிரமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள இன்று தலைமை செயலாளர் ராஜூவ் ரஞ்சன் தலைமையில் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கொரோனா அதிகரிப்பு இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வந்தால் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன