தமிழ்நாட்டில் நவ. 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில், நவ. 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-10-23 14:15 GMT

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளும் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வழங்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்படுகிறது. மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-வது வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்படும். அதேபோல், கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி உண்டு. விளையாட்டு அரங்குகளில் பயிற்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 முதல், மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே (கேரளா தவிர) சாதாரண மற்றும் ஏசி பொது பேருந்து போக்குவரத்து, 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

எனினும், திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News