காய்ச்சல், இருமல் இருந்தாலே பரிசோதனை: அரசின் புது நெறிமுறைகள் வெளியீடு
கொரோனா தொற்று பரிசோதனை தொடர்பான, புதிய நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.;
தமிழகத்தில் பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழலில், கொரோனா தொற்று பரிசோதனை தொடர்பான, புதிய நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஏதேனும் இருந்தால் பரிசோதனை நடத்த வேண்டும்; அறிகுறி இல்லையெனினும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை நடத்தப்படும்.
கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த இணை நோயாளிகளுக்கு பரிசோதனை கட்டாயம்; எனினும், தொடர்பில் இருந்தவருக்கு அறிகுறி ஏதும் இல்லை எனில் பரிசோதனை தேவையில்லை என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.