கடலூர் மாவட்டத்தில் 4ம் தேதி 79 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 25,959 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 31 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 25,268 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனாவால் இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 292 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 399 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.