திருச்சி மாவட்டத்தில் 18ம் தேதி 311 பேருக்கு கொரோனா.
திருச்சி மாவட்டத்தில் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 311 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18,884 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 227 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், இதுவரை 196 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2083 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.