தமிழகத்தில் நேற்று மட்டும் (1ம் தேதி) 2,817 பேருக்கு கொரோனா, 19 பேர் பலி : பொது சுகாதாரத்துறை

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் (1ம் தேதி) மட்டும் 2,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 19 பேர் இறந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 1083 பேருக்கும், குறைந்த பட்சமாக பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-04-01 17:30 GMT

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (1ம் தேதி) பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தனிமைப்படுத்துதலில் 17,043..பேர் உள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,93,57,008., இன்று (1ம் தேதி) ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 85,331.. இதுவரை தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,89,490.

இன்று ஒருநாளில் (1ம் தேதி மட்டும்) தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,817. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1634 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,59,709 பேர். இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,738 ஆக உள்ளது.

தமிழக மாவட்டம் வாரியாக தொற்று நிலவரம், அரியலூர் மாவட்டம் - 6, செங்கல்பட்டு மாவட்டம் - 258, சென்னை மாவட்டம் - 1டி83, கோயமுத்தூர் மாவட்டம் - 280, கடலூர் மாவட்டம் - 39, தர்மபுரி மாவட்டம் - 2. திண்டுக்கல் மாவட்டம் - 77.

ஈரோடு மாவட்டம் - 36. கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10. காஞ்சிபுரம் மாவட்டம் - 115. கன்னியாகுமரி மாவட்டம் - 31. கரூர் மாவட்டம் - 10, கிருஷ்ணகிரி மாவட்டம் - 28. மதுரை மாவட்டம் - 48. நாகப்பட்டினம் மாவட்டம் - 48, நாமக்கல் மாவட்டம் - 21. நீலகிரி மாவட்டம் - 22.

பெரம்பலூர் மாவட்டம் - 1. புதுக்கோட்டை மாவட்டம் - 17. ராமநாதபுரம் மாவட்டம் - 7. ராணிப்பேட்டை மாவட்டம் - 15, சேலம் மாவட்டம் - 51. சிவகங்கை மாவட்டம் -17. தென்காசி மாவட்டம் - 14. தஞ்சாவூர் மாவட்டம் - 113. தேனி மாவட்டம் - 13. திருப்பத்தூர் மாவட்டம் - 15. திருவள்ளூர் மாவட்டம் - 138.

திருவண்ணாமலை மாவட்டம் - 10. திருவாரூர் மாவட்டம் - 51. தூத்துக்குடி மாவட்டம் -17. திருநெல்வேலி மாவட்டம் - 60. திருப்பூர் மாவட்டம் - 60. திருச்சி மாவட்டம் - 66. வேலூர் மாவட்டம் - 34.

விழுப்புரம் மாவட்டம் - 23. விருதுநகர் மாவட்டம் - 10 பேரும் என 2,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News