நாமக்கலில் 20ம் தேதி 190 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 190 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 13,536 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 73 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 12,502 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், இதுவரை 112 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.