கடலூரில் 17ம் தேதி 190 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

கடலூர் மாவட்டத்தில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-18 03:00 GMT

கடலூர் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 190 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 27 444 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 69 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 25,964 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 300 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1180 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News