கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14ம் தேதி 156 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 156 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9 486 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 47 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,594 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 119 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 773 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.