நாமக்கல் மாவட்டத்தில் 16ம் தேதி 109 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 109 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12,941 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 49 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 12,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 111 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 594 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.