டெல்லி முதல்வருக்கு கொரோனா: பெரம்பலூர் எம்எல்ஏ-வுக்கு தொற்று உறுதி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ ஆகியோருக்கு, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஹரியானா, பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கொரோனா தொற்றின் அறிகுறிகள் அவருக்கு தென்பட்டன. லேசான கொரோனா தொற்று பாதிப்பு என்பதால், முதல்வர் கெஜ்ரிவால், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதேபோல், தமிழகத்தில் பெரம்பலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ. பிரபாகரனின் உதவியாளர், மற்றும் ஓட்டுனர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.