அரியலூர் மாவட்டத்தில் நேற்று (7 ம் தேதி) மட்டும் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக கொரோனா தொற்றின் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அரியலுார் மாவட்டத்தில் நேற்று கொரோனா வால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 57பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றிற்கு 49பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 4766 குணமடைந்துள்ளனர். நேற்று வரை 4872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 258பேர். இதுவரை மாவட்டத்தில் முன்தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 22996பேர்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவர்களிடம் இருந்து மொத்தமாக இதுவரை அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.49,34,400 என தெரிவிக்கப்பட்டுள்ளது.