இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா: சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 53,476 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.;
கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றும், தினமும் கொரோனா தொற்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் 10 ஆயிரத்திற்கும் கீழ் இருந்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,87,534 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 251 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,60,692 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 26,490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,31,650 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,95,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 5,31,45,709 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.