24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா, 275 பேர் பலி : மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் கடந்த சில தினங்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 275 பேர் பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-03-24 07:45 GMT

இந்தியாவில் கடந்த சில தினங்களாக   தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 275 பேர் பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,34,058ஆக உயர்ந்துள்ளது.

தொற்றுப் பாதிப்பில் இருந்து 23,907 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பாதிப்பிலிருந்து மொத்தம் 1,12,05,160 பேர் குணமடைந்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 275 பேர் இறந்துள்ளனர. இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,60,441 ஆக அதிகரிதுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,68,457 ஆக உள்ளது. இதுவரை 5,08,41,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News