தூத்துக்குடி மாவட்டத்தில் 80 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து விபரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 16,018 பேர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.நேற்று மட்டும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 797 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 141 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.