கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை டோக்கனைசேஷன் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

tokenization-கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை டோக்கனைசேஷன் செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Update: 2022-06-22 13:02 GMT

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை டோக்கனைசேஷன் செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இப்போது  எல்லோருக்கும் தெரியவேண்டிய ஒரு கேள்வி, கார்டுகளை  டோக்கனைசேஷன் செய்யவில்லையென்றால் என்ன ஆகும் என்பதே? வங்கியில் இருந்து அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் வரலாம். காரணம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை டோக்கனைசேஷன் செய்யவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

அவ்வாறு டோக்கனைசேஷன் செய்யாமல் விட்டால் என்ன ஆகும்?

இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள் அத்தனையும் எளிமையாகிவிடும். இப்போதைக்கு அது காட்டாயம் இல்லை என்றாலும் கூட, ஜூலை 1ம் தேதி முதல் அது கட்டாயமாகும். அவ்வாறு டோக்கனைசேஷன் செய்யவில்லை என்றால் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது, ஒவ்வொரு முறையும் வங்கியின் விபரங்கள், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளின் விபரங்கள் அனைத்தையும் பதிவிடவேண்டிய நிலை வரும்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் டோக்கனைசேஷன் நடைமுறைக்கு வந்துவிட்டால், அனைத்து சர்வர்களில் இருந்தும் கார்டுகளின் அனைத்து விபரங்களும் நீக்கப்பட்டுவிடும். எந்த விபரங்களும் எந்த சர்வரிலும்  சேமிக்கப்படக்கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் புதிய விதி. அந்த அடிப்படையிலேயே டோக்கனைசேஷன் நடைமுறைக்கு வருகிறது. அப்ப.. எப்ப டோக்கனைசேஷன் செய்யப்போறீங்க..?

Tags:    

Similar News