Upi means in tamil-யுபிஐ பணப்பரிமாற்றம் எப்படி நடக்கிறது? தெரிஞ்சுக்கங்க..!

நாணய மதிப்பு அறிமுகம் ஆனதும் பழைய பண்டமாற்றுமுறை மாறிப்போனது. எதையும் எங்கும் வாங்கலாம் என்ற நிலை வந்தது. இப்போது எல்லாம் டிஜிட்டல் மயம்.

Update: 2023-09-28 12:53 GMT

Upi means in tamil-யுபிஐ பணப்பரிமாற்றம் (கோப்பு படம்)

Upi means in tamil

பொருள் கொடுத்து பொருள் வாங்கும் பண்டமாற்று முறை

ஒரு காலத்தில் பொருட்களை பண்டமாற்று முறையில் வாங்கிக்கொண்டோம். அதுவும் கிராமங்களில் அந்த பண்டமாற்று முறை சிறப்பாக நடைபெற்றன. ஆமாம், ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த ஒரு பொருளை மாட்டு வண்டியில் வைத்து விற்பனை செய்வதற்காக கிராமங்களுக்குள் வருவார்.

அந்த பொருளுக்கு ஏற்ப அவர் ஒரு நிர்ணயம் வைத்திருப்பார். சிலர் புளி கொடுத்து வாங்குவார்கள். சிலர் கம்பு, வரகு, துவரை, நிலக்கடலை போன்ற ஏதாவது ஒன்றைக் கொடுத்து விவசாயி விற்பனை செய்துவரும் பொருளை வாங்கிக்கொள்வார்கள். எடைபோடுவதற்கு ஒரு துலாக்கோல் வைத்திருப்பார். இப்படி பண்டம் மாற்று முறை நாணயங்கள் அறிமுகமானதும் மாறிப்போனது.

Upi means in tamil

பின்னர் பணம் என்கிற மதிப்பு அளவீட்டு கருவி வந்தவுடன் பணப்பரிமாற்றம் முலமாக பொருட்கள் மற்றும் வர்த்தகம் நடைபெற்று வந்தது. தற்போது அதையும் தாண்டி எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அறிவியல் வளர்ச்சியால் நாமும் அந்த வளர்ச்சிக்கு ஏற்ப மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இன்று கிராமங்களில் கூட டிஜிட்டல் பணப்பரிமாற்றம் சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. அதனால் பல நன்மைகளும் உள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாது. அலைச்சல், காலவிரயம் போன்றவை இல்லாமல் போய்விட்டது.

வங்கித்துறை வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் UPI ஆகும். அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (Unified Payments Interface). UPI இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது என்ன, எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுமையாக நமக்குத்தெரிந்து இருக்காது. இன்று Unified Payments Interface எனப்படும் UPI குறித்து பார்ப்போம்.

Upi means in tamil


UPI என்றால் என்ன?

ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) என்பதாகும். இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (National Payment Corporation of India) மூலமாக விரிவுபடுத்தப்பட்ட ஒரு கட்டண முறையாகும். இந்த நடைமுறை இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையிலான உடனடிப் பணப் பரிவர்த்தனைக்கு வழிவகை செய்கிறது. UPI என்ற இந்த புதிய நடைமுறை ஏற்கனவே உள்ள IMPS என்ற உள்கட்டமைப்பின் மீது புதிய கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ள முடியும்.


 NPCI என்றால் என்ன?

இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனமாக இருக்கிறது.

Upi means in tamil


UPI எவ்வாறு வேலை செய்கிறது?

UPI என்ற நடைமுறை வங்கிக் கணக்கின் விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கையாளரின் இ மெயில் முகவரி (mail id) மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ அனுமதிக்கிறது. இதில் பரிவர்த்தனை உங்களின் குளோபல் அட்ரஸ் (உங்களின் கைப்பேசி எண் அல்லது ஆதார் எண்) மற்றும் லோக்கல் அட்ரஸ் (இ மெயில் ) அடிப்படையில் நடக்கிறது.

Upi means in tamil

மெய்நிகர் முகவரி

மெய்நிகர் முகவரி என்பது ஒரு மின்னஞ்சல் முகவரியை ஒத்தது. உதாரணமாக xyz@hdfc. இதில் xyz என்பது பயனாளியின் பெயர் மற்றும் HDFC உங்கள் உங்கள் வங்கியாக இருக்கும். மெய்நிகர் முகவரிகள் உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலான சிறந்த மாற்று வழியாகும். நீங்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் மெய்நிகர் முகவரிகளை உருவாக்கலாம்.

மேலும் இது மிகவும் பாதுகாப்பானது. UPI ல் இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை (2FA) பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் ஓர் ATM ல் பணம் எடுக்கும்போது உங்கள் ATM கார்டு முதல் காரணியாகவும் உங்களின் பாஸ்வேர்ட் இரண்டாவது காரணியாகவும் கொள்ளப்படுகிறது. அதே போல இதில் NCPI ஆப் BHIM மூலம் UPI குறியீடும் வங்கிகள் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது.

Upi means in tamil


UPI-PIN மற்றும் M-PIN என்பது என்ன? அதன் வேறுபாடு என்ன?

UPI- PIN என்பது 4-6 இலக்க குறியீடாக உள்ளது. இது BHIM பயன்பாட்டில் முதல் முறையாக நீங்கள் பதிவு செய்யும்போது உருவாக்கப்பட்டதாகும். UPI பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு இந்தக் குறியீட்டை நீங்கள் பயன்படுத்தலாம். MPIN என்ப‌தோ வங்கிகளால் தங்களது கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது. இவை இரண்டில் உங்களது தேவை மற்றும் பயன்படுத்தும் ஊடகத்திற்கு ஏற்ப இரண்டையும் பயன்படுத்தலாம்.

Upi means in tamil

BHIM என்பது என்ன?

BHIM (Bharat Interface for Money) UPI அல்லது சாதாரணக் கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்ய உதவுவது. பேலன்ஸ் மற்றும் ஏனைய தகவல்களுக்கும் இது பயன்படுகிறது. IMPS-ஐ லவ் வங்கி எண் குறிப்பிடும் நேரத்தையும் விட இது விரைவானது.

அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை: தற்சமயம் அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை ஒரு லட்சமாக உள்ளது.

Tags:    

Similar News