ஏங்க..UPI என்பது என்னன்னு தெரியுமா..? பணப்பரிவர்த்தனை எப்படி நடக்கிறது..? தெரிஞ்சுக்கங்க..!
UPI Means Tamil-UPI என்பது பணப்பரிவர்த்தனையில் எப்படி பயன்படுகிறது என்பது இந்த கட்டுரையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
பண்டமாற்று முறை
UPI Means Tamil-ஒரு காலத்தில் பொருட்களை பண்டமாற்று முறைகள் வாங்கிக்கொண்டோம். பின்னர் பணம் என்கிற மதிப்பு அளவீட்டு கருவி வந்தவுடன் பணப்பரிமாற்றம் முலமாக பொருட்கள் மற்றும் வர்த்தகம் நடைபெற்று வந்தது. தற்போது எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அறிவியல் வளர்ச்சியால் நாமும் அந்த வளர்ச்சிக்கு ஏற்ப மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் பல நன்மைகளும் உள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாது. அலைச்சல், காலவிரயம் போன்றவை இல்லாமல் போய்விட்டது.
வங்கித் துறை வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் UPI ஆகும். அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (Unified Payments Interface). UPI இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது என்ன, எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுமையாக நமக்குத்தெரியாது. இன்று Unified Payments Interface எனப்படும் UPI குறித்து பார்ப்போம்.
UPI என்றால் என்ன?
ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) என்பதாகும். இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (National Payment Corporation of India) மூலமாக விரிவுபடுத்தப்பட்ட ஒரு கட்டண முறையாகும். இந்த நடைமுறை இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையிலான உடனடிப் பணப் பரிவர்த்தனைக்கு வழிவகை செய்கிறது. UPI என்ற இந்த புதிய நடைமுறை ஏற்கனவே உள்ள IMPS என்ற உள்கட்டமைப்பின் மீது புதிய கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
NPCI என்றால் என்ன?
இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகிறது.
UPI எவ்வாறு வேலை செய்கிறது?
UPI என்ற நடைமுறை வங்கிக் கணக்கின் விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கையாளரின் இ மெயில் முகவரி (mail id) மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ அனுமதிக்கிறது. இதில் பரிவர்த்தனை உங்களின் குளோபல் அட்ரஸ் (உங்களின் கைப்பேசி எண் அல்லது ஆதார் எண்) மற்றும் லோக்கல் அட்ரஸ் (இ மெயில் ) அடிப்படையில் நடக்கிறது.
மெய்நிகர் முகவரி
மெய்நிகர் முகவரி என்பது ஒரு மின்னஞ்சல் முகவரியை ஒத்தது. உதாரணமாக xyz@hdfc. இதில் xyz என்பது பயனாளியின் பெயர் மற்றும் HDFC உங்கள் உங்கள் வங்கியாக இருக்கும். மெய்நிகர் முகவரிகள் உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலான சிறந்த மாற்று வழியாகும். நீங்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் மெய்நிகர் முகவரிகளை உருவாக்கலாம்.
மேலும் இது மிகவும் பாதுகாப்பானது (பிட்காயின் பரிமாற்றங்களை ஒத்தது). UPI ல் இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை (2FA) பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் ஓர் ATM ல் பணம் எடுக்கும்போது உங்கள் ATM கார்டு முதல் காரணியாகவும் உங்களின் பாஸ்வேர்ட் இரண்டாவது காரணியாகவும் கொள்ளப்படுகிறது. அதே போல இதில் NCPI ஆப் BHIM மூலம் UPI குறியீடும் வங்கிகள் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது.
UPI-PIN மற்றும் M-PIN என்பது என்ன? அதன் வேறுபாடு என்ன?
UPI- PIN என்பது 4-6 இலக்க குறியீடாக உள்ளது. இது BHIM பயன்பாட்டில் முதல் முறையாக நீங்கள் பதிவு செய்யும்போது உருவாக்கப்பட்டதாகும். UPI பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு இந்தக் குறியீட்டை நீங்கள் பயன்படுத்தலாம். MPIN என்பதோ வங்கிகளால் தங்களது கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது. இவை இரண்டில் உங்களது தேவை மற்றும் பயன்படுத்தும் ஊடகத்திற்கு ஏற்ப இரண்டையும் பயன்படுத்தலாம்.
BHIM என்பது என்ன?
BHIM (Bharat Interface for Money) UPI அல்லது சாதாரணக் கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்ய உதவுவது. பேலன்ஸ் மற்றும் ஏனைய தகவல்களுக்கும் இது பயன்படுகிறது. IMPS-ஐ லவ் வங்கி எண் குறிப்பிடும் நேரத்தையும் விட இது விரைவானது.
அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை: தற்சமயம் அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை ஒரு லட்சமாக உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2