10 ஆயிரம் ரூபாய்க்கு 108 எம்பி கேமராவா? போட்டுத்தாக்கும் ரியல்மி நிறுவனம்..!
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது சி53 (realme C53) ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.;
realme C53 மாடல் ஸ்மார்ட் போன்
realme C53 smart phone news in tamil
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் ரக செக்மென்டில் புதுப்புது அம்சங்களுடன் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்வதில் ரியல்மி நிறுவனம் முன்னனியில் உள்ளது.
குறிப்பாக, ரியல்மி நிறுவனத்தின் C சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது C53 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஜூலை 19 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்த புதிய சி53 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, 560 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் மற்றும், 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் கூடிய ஹெச்டி+ 6.74' இன்ச் IPS LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டிஸ்பிளே வாட்டர் டிராப் நாட்ச் வருகிறது. அது மட்டுமல்லாமல் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
மேலும், இது குளோபல் மாடல், Mali-G57 GPU உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் Unisoc T612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை முக்கிய அம்சமாக, 108MP பிரைமரி கேமராவை கொண்டிருக்கும் என உறுதியாக தெரிகிறது.
அதோடு, 2MP போர்ட்ரெய்ட் லென்ஸ், மற்றும் 8MP செல்ஃபி கேமராவை கொண்டிருக்கும். இதுதவிர, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 9,800 என்ற விலையில் வருகிறது.
இந்தியாவில் இந்த சாதனம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரையிலான விலை வரம்பில் விற்பனையாகும் என தெரிகிறது. மிகவும் குறைவான விலையில் 108 எம்பி கேமரா கொண்ட போனாக இந்த சி53 மாடல் விற்பனைக்கு வரும் பட்சத்தில் போட்டி நிறுவனங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.