இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
இன்று 14ம் நாளாக பெட்ரோல், டீசல் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.;
எண்ணெய் கம்பெனிகள், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கின. மார்ச் 31 வரை 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05ம், டீசல் விலை ரூ.6.05ம் உயர்த்தப்படது. ஏப்.1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை. 2ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் துவங்கியுள்ளது. இன்று 14ம் நாளாக மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
நாமக்கல் பகுதியில் இன்று 6ம் தேதி, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 75 பைசா உயர்த்தப்பட்டு ரூ.111.48 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் லிட்டருக்கு 75 பைசா உயர்த்தப்பட்டு ரூ.115.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 77 பைசா உயர்த்தப்பட்டு ரூ.101.59 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.