இன்று 12ம் நாளாக மீண்டும் விலை உயர்வு; டீசல் விலை சதம் அடித்தது
இன்று 14ம் நாளாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூ.100 ஐ தாண்டியது.;
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள், சர்வதேச விலை நிலவரத்துக்கு இணையாக, தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் கடும் கொரோனா தொற்று பரவல் காலத்திலும். அரசு விடுமுறை நாட்களிலும், அடிக்கடி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது.
கடந்த 22ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கினர். மார்ச் 31 வரை 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05ம், டீசல் விலை ரூ.6.05ம் உயர்த்தப்படது. ஏப்.1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை. 2ம் தேதி மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத்துவங்கியுளள்ளது. இன்று 12ம் நாளாக மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
நாமக்கல் பகுதியில் இன்று 4ம் தேதி, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 38 பைசா உயர்த்தப்பட்டு ரூ.109.97 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் லிட்டருக்கு 38 பைசா உயர்த்தப்பட்டு ரூ.114.28 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 38 பைசா உயர்த்தப்பட்டு ரூ.100.06 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.100ஐ தாண்டியுள்ளதால் பொதுமக்கள், சிறு வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.