பெட்ரோல், டீசல் விலை இன்று 9வது நாளாக உயர்வு: வாகன ஓட்டிகள் கவலை
இன்று 9வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.;
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள், சர்வதேச விலை நிலவரத்துக்கு இணையாக, தாங்களே விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. எண்ணெய் கம்பெனிகள் மீண்டும், கடந்த 22ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கியுள்ளன. இன்று 31 தேதி தொடர்ந்து 9வது நாளாக மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாமக்கல் பகுதியில் இன்று காலை 6 மணி முதல், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 75 பைசா உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.108.08 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 75 பைசா உயர்த்தப்பட்டு ரூ.112.39 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசலுக்கு 76 பைசா உயர்த்தப்பட்டு ரூ.98.16 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.