kr market flower market-'பூவினும் மெல்லிய காதலிக்கு' மலர்கொடுத்து காதல் சொல்ல கே.ஆர். மலர் சந்தைக்கு போங்க..!

எங்கு திரும்பினும் வண்ணக் கலவையாக மலர்களின் அணிவகுப்பு. கூடை கூடையாக பூக்களின் சிரிப்பு. கே.ஆர். மலர் சந்தையில் பூத்த மலர்க்கவிதைகள்.;

Update: 2023-08-10 08:50 GMT

kr market flower market -பெங்களூரு கே.ஆர்.மலர் சந்தை (கோப்பு படம்)

kr market flower market

சுவாரஸ்யம் நிறைந்த மலர் சந்தை 

கே.ஆர். பூ மார்கெட்- ல் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அத்தனையும் பூக்களின் சுவாரஸ்யங்கள். திரும்பிய பக்கமெல்லாம் வண்ண வண்ண மலர்கள். மலர்கள் என்பவை பூமியின் பறக்காத வண்ணத்துப்பூச்சிகள்

கண்ணுக்குள் நிறைந்த வண்ணங்களின் குளுமையுடன் , எண்ணற்ற பூக்களின் கூடைகள், பேரம் பேசும் வாடிக்கையாளர்கள், வியக்கத்தக்க வகையில் ரசிக்க வைக்கும், பல பைத்தியக்காரத்தனம் நிறைந்த பேச்சுவார்த்தைகள், குழப்பங்கள் என பல கலவையான மக்கள் கூடிய ஒரு இடமாக பெங்களூரின் K.R. மலர் சந்தையைக் காணலாம்.


kr market flower market

ஆசியாவின் பெரிய மலர் சந்தை 

இது ஆசியாவின் மிகப்பெரிய பூ சந்தையாக கருதப்படுகிறது. நீங்கள் சந்தையை நோக்கி செல்லும்போதே மேம்பாலம் தொடங்கிய இடத்தில் இருந்து தர்காவிற்கு அருகில் வியாபாரத்திற்காக வரிசையாக நிற்கும் ஏராளமான விற்பனையாளர்கள் உங்கள் கண்ணில் படுவார்கள். மலர்களைத் தாங்கி நிற்கும் புவியின் உண்மையான மலர் வியாபாரிகளான அவர்களை காண மறக்காதீர்கள். வழிகளைக் கேட்கத் தயங்காதீர்கள். வெளிப்படையாகச் சொன்னால், நாமும் முதல் முறையாக சந்தைக்குள் தொலைந்து போனோம்.

சலசலப்பான காய்கறிகள் மற்றும் பழங்கள் பரப்பிய சந்தை வழியாக நடந்து, சந்தையின் மற்றொரு பகுதியைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் அடித்தளத்திற்கு சென்றடைய வேண்டும். நீங்கள் அங்கு சென்றதும், பழைய பள்ளிக்கூடத்தின் முற்றத்தைப் போல தோற்றமளிக்கும் கட்டிடத்தின் மையத்தை சென்றடைய மேலும் கடைகளைத் தாண்டி செல்லுங்கள்.

ஊடகங்களில் சந்தையைக் காண்பிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படும் பூக்கள் மற்றும் விற்பனையாளர்களின் அழகிய காட்சியை நீங்கள் காணமுடியும்.

kr market flower market


வகை வகை பூக்கள் 

ரோஜாக்கள், மேரிகோல்ட்ஸ், மல்லிகை முதல் அல்லி, ஆர்க்கிட்கள் மற்றும் கார்னேஷன்கள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் நீங்கள் காணலாம். இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறங்களின் வெவ்வேறு சாயல்கள், எப்போதாவது மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்கள் பிரகாசமான வண்ணங்களை சமநிலைப்படுத்தும் லேசான மங்கிய நிறங்கள் என முற்றிலும் நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஒரு முக்கிய மலர் சந்திப்பாகும்.


செயல்படும் நேரம் 

கே.ஆர். மலர் சந்தை அதிகாலை 2 மணிக்கு செயல்படத் தொடங்கி இரவு 10 மணி வரை நீடிக்கும். இருப்பினும், நீங்கள் சந்தையை அதன் முழு வீச்சுடன் பார்க்க விரும்பினால், காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பார்வைஇடுங்கள்.

இங்குள்ள அழகான பூக்களின் பாரிய வகைகள் கிடைப்பதுடன் மலிவான விலையில் கிடைப்பதே நம்மை கவர்ந்திழுக்கும் விஷயம். கிலோ கணக்கில் விற்கப்படும் ரோஜாக்கள் கிலோ வெறும் ரூ.60 மட்டுமே.

ஒவ்வொரு மூலையிலும் ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட அறை யாருடையது என்று கேட்கும் அளவுக்கு அந்த ரோஜாக்கள் "கண் சிமிட்டி" எம்மை வரவேற்கின்றன. எந்த ஒரு விழாவுக்கும், எந்த ஒரு விசேஷத்திற்கும் அது விருந்துகளாகட்டும், திருமணம், பிறந்த நாள் போன்ற எந்த நிகழ்வுகள் ஆகட்டும் மலருக்கென்று போய் நிற்கவேண்டிய முதல் இடம் கே.ஆர். மலர் சந்தை. (என்ன விளம்பரப்படுத்துவது போல இருக்கிறதா?- உண்மையைச் சொன்னேன் )


kr market flower market

நண்பனுக்கு பிறந்தநாள், காதலிக்கு பிறந்த நாள், நண்பனுக்கு திருமணம், தங்கைக்கு, சித்தப்பாவுக்கு அல்லது மாமாவுக்கு திருமணம். இந்த விசேங்களுக்கு மலர்கள் வேண்டும். எங்கே செல்லவேண்டும் என்று இப்போது உங்களுக்குத் தெரியும்.

குறைந்த விலையாக ரூ.10ல் இருந்து தொடங்கும்.

Tags:    

Similar News