ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் இனி வராது..! உற்பத்தியை நிறுத்த முடிவு..!
johnson & johnson -ஒரு வீட்டில் பேபி பிறந்தால் ஜான்சன் & ஜான்சன் நிறுவன உற்பத்திப்பொருட்கள் இல்லாமல் இருக்காது. அப்படி பெயர்பெற்ற நிறுவனத்துக்கு என்ன ஆச்சு? வாங்க பார்க்கலாம்.;
johnson & johnson stopping baby powder-ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர்.
johnson & johnson stopping baby powder-அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மருந்து நிறுவனம், ஜான்சன் & ஜான்சன். இந்த பெயரைக்கேட்டதுமே ஒவ்வொருவரின் மனதில் தோன்றுவது பேபி சோப்பு மற்றும் பேபி பவுடர் மட்டுமே. கிட்டத்தட்ட 136 ஆண்டு பாரம்பர்யத்தைக் கொண்ட ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், மருந்து உற்பத்தி செய்வதில் முன்னணி பன்னாட்டு நிறுவனமாக திகழ்கிறது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத் தயாரிப்பான பேபி பவுடர், இந்தியாவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளில் விரும்பி வாங்கும் பவுடராக இருந்தது.
இந்நிலையில் வரும் 2023ம் ஆண்டு முதல் பேபி பவுடர் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக சோள மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பேபி பவுடரில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த பவுடரை பயன்படுத்துவதால் கருப்பை புற்றுநோய் போன்ற உடல் ரீதியிலான பாதிப்புகள் வருவதாக பெண்கள் ஆயிரக்கணக்கான வழக்குகளை தொடுத்தனர். வட அமெரிக்காவில் மட்டுமே 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தொடக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், முறையாக அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி முறையான ஒப்புதலுக்கு பிறகே விற்பனைக்கு வருவதாக நிறுவனம் சார்பில் விளக்கம் தரப்பட்டது. எப்படி இருப்பினும் பல நாடுகளில் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரின் விற்பனை கணிசமான அளவில் குறைந்தது.
இந்த விற்பனை சரிவால் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பேபி டால்கம் பவுடர் விற்பனையை அடுத்தாண்டு முதல் நிறுத்திக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் பேபி டால்கம் பவுடர் எந்த விதத்திலும் பாதுகாப்பு குறைபாடுள்ளது என்பதை மறுத்துள்ளது. பேபி டால்கம் பவுடர் மிகவும் பாதுகாப்பானது என்று திட்டவட்டமாக நிறுவனம் தெரிவித்துள்ளது.