வீட்டுக்கடன் உங்களுக்கான வலையா அல்லது வாழ்வா?

ஹோம் லோன் (வீட்டு கடன்) வாங்கும் போது இப்படி மட்டும் மாட்டிக்காதீங்க மக்களே..;

Update: 2024-01-13 15:51 GMT

வீட்டுக்கடன் வாங்கிய பலர் நம் கண் முன்னே இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வீட்டுக்கடன் வாங்குவோர் சந்திக்கும் பெரிய சிக்கல்களை இப்போது பார்ப்போம். அப்பார்ட்மெண்ட் வாங்கலாம், தனியாக வீடு வாங்கலாம் என்ற ஆசையில் உள்ளீர்களா.. வீட்டுக்கடன் வாங்கித்தான் வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்களா.. அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத் தான்

இது பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறிய தகவல்களையும், பொதுமக்கள் அனுபவங்களையும் இப்போது பார்ப்போம்.

இதுபற்றி பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "பொதுவாக கடன் வாங்குவது தவறு இல்லை.. ஆனால் கடன் வாங்கி டூர் போய்விட்டு வருவது, அன்றாட செலவுக்கு கடன் வாங்குவது தவறு. அதேநேரம் ஒரு சொத்து வாங்குவதற்காக கடன் வாங்குவது தவறு இல்லை. ஏனெனில் கடன் வாங்கி சொத்து வாங்கும் போது, அதன் மதிப்பு பின்னாளில் நாம் கடனுக்கு கட்டிய வட்டியை விட அதிகமாகவே இருக்கும்.

உதாரணமாக தாம்பரம் புறநகர் பகுதியில் இடமோ அல்லது வீடோ 2010 இல் வாங்கியிருந்தால் அதன் மதிப்பு இன்று அப்படியே இரண்டு மடங்கு அதிமாகி உள்ளது. அதேபோல் 2010ல் ஒரு வீடு கட்ட ஆன செலவையும் , இப்போது அதே வீடு கட்ட நிலத்தின் மதிப்போடு யோசித்து பார்த்தால் தலை சுற்ற வைக்கும். அந்த வகையில் வீடு அல்லது இடம் வாங்க கடன் வாங்குதில் தவறு இல்லை.

வீட்டுக்கடன் வாங்குவோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் வீட்டுக்கடனை ஆரம்பத்தில் இருந்தே கூடுதல் பணம் கொடுத்து அடைப்பது நல்லது. உதாரணத்திற்காக மாதம் 30 ஆயிரம் இஎம்ஐ இல் வீடு 25 வருடத்திற்கு கட்டுகிறீர்கள் என்றால், ஆண்டுக்கு ஒரு மாத தவணை தொகையை முழுமையாக முன்கூட்டியே செலுத்தினால் உங்களுக்கு மிகப்பெரிய லாபம் இருக்கும்.

அதாவது உங்களால் முடிந்த அளவிற்கு அதிகமாக down-payment செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, ரூ. 50 லட்சம் கடன், 8% வட்டியில் எடுத்திருந்தால், உங்களது down-paymentல் ரூ. 5 லட்சம் கூடுதலாக செலுத்தினால், வட்டியில் நீங்கள் ரூ. 6 லட்சம் வரை சேமிக்கலாம்.

உங்கள் வருமானம் ஏற ஏற, உங்களது மாதத் தவணை தொகையையும் அதிகரித்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் ரூ. 40 லட்சம் கடன், 20 வருடங்களுக்கு, 7.5% வட்டியில் எடுத்திருந்தால், மாதத் தவணை தொகையில், ரூ. 5,000 கூடுதலாக செலுத்தும் போது, 7 வருடங்களுக்கு முன்னதாகவே உங்களது கடன் முடிந்து விடும். வட்டித் தொகையில் ரூ. 8 லட்சம் சேமிக்கவும் முடியும்.

அதேநேரம் வீட்டுக்கடன் பற்றி முழுமையாக சரிவர தெரியாமல் கடன் வாங்குவது ஆபத்தானது. ஏனெனில் பணம் அதிகம் வைத்துள்ள பணக்ககாரர்கள், பெரும் செல்வந்தர்கள் வீடு கட்ட கடன் வாங்குகிறார்கள் என்றால் அவர்களால் எப்போது வேண்டுமானாலும் கடனை கட்டி முடித்து விட முடியும்.

ஆனால் சாமானியர்களால் கடனை கட்ட முடியாமல் போன வீடு பறி போய் விடும். வீட்டு கடனை 3 மாதம் தொடந்து கட்டமால் போனால் சிக்கல் வரும். நிலையான வருமானம் உள்ளவர்கள், மாதம் மாதம் கண்டிப்பாக இஎம்ஐ கட்டிவிட முடியும் என்பவர்கள் மட்டுமே வீட்டுக்கடன் வாங்கவேண்டும். வீட்டுக்கடன் என்பது உங்களை 20 வருடங்கள் இஎம்ஐ இல் தள்ளும். அதாவது உங்கள் இளமை காலம் முழுவதும் இஎம்ஐ கட்ட உழைக்க வேண்டியதிருக்கும்.

வீட்டுக்கடன் எடுத்துவிட்டால் அடுத்த 20 வருடம் இஎம்ஐ வலையில் இருந்து மீள முடியாது. எனவே சொந்த தொழில் ஐடியா உள்ளவர்கள், ஒரு நிறுவனத்தில் காலத்திற்கும் வேலைக்கு போக விரும்பாதவர்கள், நிரந்தமான வேலை இல்லாதவர்கள், அதிகமான கடன் உள்ளவர்கள் கண்டிப்பாக வீட்டுக்கடனை பற்றி யோசிக்கவே வேண்டாம்.

இதுபற்றி அனுபவஸ்தர்கள் கூறுகையில், மாதம் 20 ஆயிரம் இஎம்ஐ இல் வீடு கட்ட அல்லது வீடு வாங்க லோன் போடுறீங்க என்றால், குறைந்தது உங்கள் மாதம் சம்பளம் 70 ஆயிரத்திற்கு மேல் இருப்பது நல்லது. அதற்கு மேல் சிறு கடன் கூட வாங்கிவிட கூடாது. நகை லோன், அந்த லோன், இந்த லோன் என இருந்தால் உங்களால் மீளவே முடியாது.

கடனையும் கட்ட முடியாமல் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல், நெருக்கடிக்கு தள்ளப்படுவீர்கள்.. எனவே சாதாரண சம்பளம் வாங்குவோர் உங்களில் சம்பளத்தில் பாதியை கடனாக கட்டலாம் என கணக்கு போட்டு கடன் வாங்கினால் பெரும் நெருக்கடியை சந்திப்பீர்கள் என கடன் வாங்கி மீள முடியாதவர்கள் கூறுகிறார்கள். கவனமாக இருங்கள்.

Tags:    

Similar News