மொபைல் போன் தயாரிப்பு 20 சதவீதம் சரிவு
உலகம் முழுவதும் எழுந்துள்ள பொருளாதார மந்தநிலை இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.;
கொரோனா பேரிடர், ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் மட்டும் நல்ல நிலையில் உள்ளது என கூறப்பட்டு வந்தது.
ஆனால் இந்தியாவிலும் சில துறைகளில் உலக பொருளாதார மந்த நிலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மொபைல் போன் உற்பத்தி துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பு, 20 சதவீதம் அளவிற்கு சரிவடைந்து வருவதாக, தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது.
மொபைல்போன் தயாரிப்பு 20 சதவீதம் அளவிற்கு குறைந்து வருவதுடன். பெரும்பாலான நிறுவனங்கள், தாங்கள் தயாரித்த மொபைல் போன்களை விற்க முடியாத நிலையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், மொபைல் போன் தயாரிப்பு சரிவுக்கு, கடந்த ஆறு மாதங்களாக மொபைல் போன் விற்பனையில் ஏற்பட்ட சுணக்கமே காரணம் என துறைசார்ந்த வல்லநர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் மொபைல் போன் விற்பனை 30 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது. நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 18 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகள் Q1 2023 இல் (ஜனவரி-மார்ச்) 19% குறைந்து 31 மில்லியன் யூனிட்களை எட்டியது . இது இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் இதுவரை கண்டிராத அதிகபட்ச முதல் காலாண்டு சரிவாகும், இது தொடர்ந்து மூன்றாவது காலாண்டு சரிவு ஆகும். மந்தமான தேவை, 2022 ஆம் ஆண்டிலிருந்து அதிக சரக்குகளை உருவாக்குதல், புதுப்பிக்கப்பட்ட தொலைபேசிகளுக்கான நுகர்வோர் விருப்பம் மற்றும் சந்தையின் அவநம்பிக்கையான சேனல் பார்வை ஆகியவை இந்த சரிவுக்கு பங்களித்தன.
இப்போது புதிய மாடல்களின் புதிய சரக்குகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஏற்கனவே உள்ள சரக்குகளை அகற்றுவதில் கவனம் செலுத்துகின்றனர்.
இந்த பாதிப்பானது உலகம் முழுவதும் நிலவுவதாகவும், இன்னும் சில காலங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், 5ஜி மொபைல்களின் விற்பனை வேகம் இன்னும் அதிகரிக்கவில்லை என்ற தகவல்களும் வெளிவருகின்றன. மொபைல் சந்தை மீண்டும் பழைய நிலையை எட்டுவதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது.
2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலும் இந்த சூழ்நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும், வேகமான 5G காரணமாக ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி மீண்டும் வரும் என்றும் கூறியுள்ளனர்