இந்தியாவின் தங்கம் : கையிருப்பு நிலவரம்?
ரிசர்வ் பேங்க் போன வாரம் 100 டன் தங்கத்தை நமது நாட்டுக்கு திரும்பவும் கொண்டு வந்தது.
1991 இல் இந்தியா 67 டன் தங்கத்தை அடமானம் வைத்து தான் அப்போது 400 மில்லியன் டாலர் கடன் வாங்கியது. அப்போது இந்தியாவிடம் இருந்தது 333 டன் தங்கம் மட்டுமே. ஆனால் அப்போது இருந்த அந்நிய செலாவணி எவ்வளவு தெரியுமா? 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டும் தான்.
அதே நேரத்திலே அப்போது நம்மிடம் இருந்த வெளிநாட்டு கடன் 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. அப்போது இந்தியா தம்மிடம் இருந்த அந்நிய செலாவணி இருப்பினை விட கிட்டத்தட்ட 11 மடங்கு அதிகமாக இந்தியா கடன் வாங்கியிருந்தது. இதனால் இந்தியாவிற்கு அப்போது யாரும் கடன் தர முன்வரவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் 67 டன் தங்கத்தை அடமானம் வைத்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியா கடன் வாங்கியது.
மேற்கொண்டு கடன் வேணுமின்னா பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யனும் என உலக நிதி முனையம் அதாவது ஐஎம்எப் சொல்லிடுச்சு. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் தான் பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வந்தாங்க என நாம நம்பிட்டு இருக்கோம் இல்லையா? ஆனால் அது உண்மையில்லை.
இதை நான் சொல்லல. முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜனே ஒரு பேட்டியிலே சொல்லியிருக்கார். அப்போது அவர் ஐ எம் எப் இல் ஆலோசகரா இருந்தார். அந்த கடன் வாங்கினதுக்கு அப்புறமும் பாதிக்கும் மேல் தங்கம். அதாவது மொத்தம் இருந்த 333 டன் தங்கத்திலே 200 டன் தங்கத்தை வெளிநாடுகளிலே வைத்திருந்தனர். அந்த நடைமுறை இப்ப வரைக்கும் இருந்துட்டு வந்தது.
இந்தியாவிடம் இந்த 333 டன் தங்கம் தான் 2009 வரைக்கும் இருந்தது. 2009 இல் 200 டன் தங்கம் கூடுதலாக வாங்கினாங்க. அது எப்படீன்னா அப்போ உலக வங்கி தன்னிடம் இருந்த தங்கம் ஆயிரம் டன் விற்றது. அதிலே ஒரு 200 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது. 2018 வரைக்கும் அதே அளவு தங்கம் தான் இருந்தது. கடந்த ஐந்து வருடங்களிலே இந்தியா கொஞ்சம் கொஞ்சமா தங்கம் வாங்கி கையிருப்பினை அதிகரிக்க தொடங்கியது. ஐந்து ஆண்டில் 250 டன் தங்கம் வாங்கி குவித்தது இந்தியா.
ஆக 1991 இல் 333 டன்னா இருந்த இந்தியாவின் தங்க கையிருப்பு, 2009 இல் 357 டன்னாக இருந்த தங்கம் கையிருப்பு, 2018 இல் 560 டன் மட்டுமே இருந்த தங்கம் கையிருப்பு 2024 இல் 803 டன்னாக அதிகரித்தது. இதுல இன்னமும் எவ்வளவு டன் வெளிநாட்டிலே இருக்குன்னு ரிசர்வ் வங்கி தகவல் வெளியிடவில்லை.எப்படியும் 20 முதல் 40 சதவீதம் வரை இருக்கும் என்ற கணிப்பு மட்டுமே உள்ளது.
உலக அளவில் தங்கம் கையிருப்பிலே 9 ஆம் இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா முதலிடத்திலே இருக்கிறது. அந்த நாட்டிடம் மொத்தம் எட்டாயிரம் டன்களுகு்கும் அதிக தங்கம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியாவின் தங்க கையிருப்பு அடுத்த ஐந்து வருடங்களிலே வேகமாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அதையும் செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் தங்கம் முழுவதும் மீட்கப்பட்டு இந்தியாவின் முழு தங்கமும் நம்மிடமே இங்கேயே இருக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் உறுதி கூறுகின்றனர்.