இனி மாலைநேரங்களிலும் உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழகத்தில், இனி மாலை நேரங்களிலும் உழவர் சந்தை செயல்படும் என்று, வேளாண் பட்ஜெட்டில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

Update: 2022-03-19 09:00 GMT

கோப்பு படம் 

இது தொடர்பாக, வேளாண் பட்ஜெட்டில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலையில் மட்டுமின்றி மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. உழவர் சந்தைகளில்,  மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இதுதவிர, ரூ.10 கோடியில் 10 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் வகையில் "தமிழ் மண் வளம்" என்ற இணையதளம் உருவாக்கப்படும் என்றார். 

Tags:    

Similar News