உங்களுக்கு தயாரிக்க தெரியுமா தட்டைப்பயிறு பாயாசம்?

Thatta Payaru in Tamil-தட்டைப்பயிறு பாயாசம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Update: 2023-02-19 12:07 GMT

Thatta Payaru in Tamil

Thatta Payaru in Tamil-காராமணி (cowpea) என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு என்றும் கூறுவர். இது கருமை நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும். இந்த பயற்றினைத் தனியே வேகவைத்தும் உண்பர். குழம்பு, பொரியல், அவியல் துவையல் போன்றவற்றிலும் சேர்த்துக்கொண்டு சாப்பிடலாம். ஊறவைத்து அரைத்துப் பலகாரமும் செய்யலாம். காராமணிப்பயறு மட்டுமல்லாமல் காராமணிப் பயற்றங்காய்களும் காய்கறிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.

cowpea in tamilமொச்சைக்கொட்டை போல காராமணிப் பயறும் வளி(வாயு)ப் பொருள் எனத் தமிழ்மருத்துவர்கள் கூறுகின்றனர்.வானம்பார்த்த புன்செய் நிலத்தில் பயிரிடப்பட்டுவந்த காராமணிப்பயறு இப்போது நீர்ப்பாசனம் செய்தும் பயிரிடப்படுகிறது. 


தட்டைப் பயிர் எனப்படும் காராமணி இது ஒரு பன்முக தன்மை கொண்ட உணவுப் பொருளாகும். தட்டைப் பயிரில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தட்டைப்பயிறு செடிக்கு அதிக அளவு தண்ணீர் தேவையில்லை. ஆதலால் இது ஒரு மானாவரி பயிராக வளர்க்கப்படுகிறது அதே சமயத்தில் நிழல் எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு வகை பயிராகும். வெயிலில் தான் இது வளரும். இந்தியாவைப் பொறுத்தவரை இது ஆண்டுக்கு 45 மில்லியன் எக்டர்ஸ்சில் தட்டைப்பயிர் பயிரிடப்பட்டு வருகிறது.

உலகில் தட்டைப்பயிர் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, உலகிலேயே தட்டைப்பயிறு அதிகமாக பயிரிடப்படும் நாடுகளில் ஒன்று நைஜீரியா ஆகும். இந்தியாவில் சுமார் 14 வகையான தட்டைப் பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது.

தட்டைப் பயிர்களை காய்கறி வகை தட்டைப்பயிறு, கீரை வகை தட்டைப்பயிறு, பயறு வகை தட்டைப்பயிறு என மூன்றாக பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை பயிர்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஜூன் ஜூலை மாதங்களில் பயிரிடப்படுகிறது.இவற்றின் ஆயுட்காலம் 50 முதல் 90 நாட்கள் ஆகும். மானாவாரியாக  இவை ஒரு ஏக்கருக்கு 2500 கிலோவும், நீர் பாய்ச்சினால் 5000 கிலோ கிராமும் மகசூல் கிடைக்கும்.


தட்டைப்பயிரில் புரத சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் இவை உணவாகவும் மாவுப்பொருளாகவும் குழம்புகளில் போட்டும் மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இது தவிர இவை விலங்குகளுக்கும் உணவாக பயன்படுகிறது. தட்டைப்பயிறு செடி விலங்குகளுக்கு மாடு, ஆடு போன்ற விலங்களுக்கு மிகச் சிறந்த உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தட்டைப்பயிறு பன்னெடுங்காலமாக பயிரிடப்பட்டு வருகிறது என்றே கூறவேண்டும். தென்னை, வாழை மற்றும் தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறி செடிகளின் நடுவில் ஊடுபயிராகவும் இது பயிரிடப்பட்டு வருகிறது. பெரும்பாலான கிராமப்புற மக்களின் காலை உணவாக தட்டைப்பயிறு உண்ணப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்ல கிராமப்புறங்களில்  கருப்பட்டியுடன் சேர்த்து தயாரிக்கப்படும் தட்டைப்பயிர் பாயாசத்திற்கு நிகர் எதுவும் கிடையாது என்கிறார்கள் கிராமப்புற விவசாயிகள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News