ஓய்வு நேரத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?ஆச்சரியப்படுத்தும் இளைஞர்கள்
பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஓய்வு நேரத்தில் அருகில் உள்ள வனப்பகுதிகளில் மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர்;
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வசந்தா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள்அருகில் உள்ள வனப்பகுதிகளில் மரக்கன்று நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து பசுபதி என்ற இளைஞர் கூறியதாவது: ஊரடங்கினால் வீட்டில் முடங்கிக் கிடப்பது போல் தோன்றியதால் சும்மா இருக்க பிடிக்காமல் அருகில் உள்ள வனப் பகுதிகளுக்கு மரக்கன்று வைத்தால் என்ன என்ற யோசனை சில நாட்களுக்கு முன்பு முன்பு உதித்தது. அப்போது தனியாக வந்து ஒரு சில மரக்கன்று விதைகளை விதைத்தேன் பிறகு நண்பர்களிடமும் இது குறித்து தெரிவித்த போது அவர்களும் உடன் வந்தார்கள் தற்பொழுது நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளிபாளையம் பகுதியில் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். ஊரடங்கிலும் தன்னல சேவை செய்து வரும் இளைஞர்களை சமூக நல ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.