ஆவிகோட்டையில் கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி

ஆவிகோட்டையில் அட்மா திட்டத்தின் கீழ் கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-03 07:50 GMT

ஆவிகோட்டையில் அட்மா திட்டத்தின் கீழ் கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவிகோட்டையில் அட்மா திட்டத்தின் கீழ் கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கலாஜதா கலை நிகழ்ச்சி மூலம் தொழில்நுட்பம் பரவலாக்குதல் குறித்த நிகழ்ச்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆவிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க மானிய திட்டம், பயிர் காப்பீடு செய்தல், உளுந்து பயிருக்கு பூக்கும் தருணத்தில் டிஏபி தெளிப்பு செய்தல், நிலக்கடலை பயிருக்கு நுண்ணூட்டம் இடுதல் மற்றும் ஜிப்சத்தின் பயன்பாடு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் தென்னையை தாக்கும் ரூகோஸ் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் கண்டறிதல் மற்றும் இயற்கை முறையில் கட்டுப்படுத்துதல் குறித்த தொழில் நுட்பங்களை கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தற்சமயம் நமது வேளாண்மை துறையில் பண்ணை கருவிகள் இருப்பில் உள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் மானியத்தில் வாங்கி பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுகிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் அய்யாமணி மற்றும் பயிர் அறுவடை பணியாளர் அருள்மரியா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News