எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிக்க மதுக்கூர் விவசாயிகளுக்கு பயிற்சி
பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான நுட்பங்கள் குறித்து பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகள்.
தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய்வித்து திட்டத்தின் கீழ், 30 விவசாயிகளுக்கு, பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான முன்னேறிய தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சியை, ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல்வர் வேலாயுதம் அளித்தார்.
நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் எடுப்பதற்கு முன்னோடி தொழில்நுட்பங்களான, சரியான பருவத்தில் விதைத்தல், சரியான ரகம் தேர்வு, கடலைப் பயிருக்கு ஜிப்சம் இட்டு மண் அணைத்தல், ட்ரம்களை கொத்துக்கடலை ரகத்தில் உருட்டுவதால் ஏற்படும் மகசூல் அதிகரிப்பு மற்றும் நிலக்கடலையில் வரும் பூச்சிகள் அதற்கான மேலாண்மை பற்றி தெளிவாக விளக்கிக் கூறினார்.
வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் ஜஸ்டின் அவர்கள் எள் சாகுபடி மற்றும் அதற்கான முன்னோடி தொழில்நுட்பங்கள் பயிர் பயிர் எண்ணிக்கை பராமரிப்பு எள்நுண்ணூட்டம் பயன்படுத்துவதன் அவசியம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தஞ்சை மாவட்ட ஆலோசகர் இளஞ்செழியன், எண்ணெய் வித்து பயிர்களுக்கான உர மேலாண்மை பற்றியும் திரவ உயிர் உரங்களின் அவசியம் பற்றியும் விளக்கினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் பட்டுக்கோட்டை மாலதி, அவர்கள் தஞ்சை நஞ்சையில் உளுந்து சாகுபடி பற்றி காணொளி வாயிலாக விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். விதை சான்று அலுவலர் சங்கீதா மற்றும் விதை ஆய்வு அலுவலர் நவீன் சேவியர் ஆகியோர், விதைச்சான்று தொழில்நுட்பங்கள் மற்றும் விதைகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினர்.
இப்பயிற்சியில், மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயி மூர்த்தி சேதுராமன் ஆகியோர், தங்களுடைய அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் சுதா மற்றும் சாந்தி செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu