Tapioca in tamil-பஞ்ச காலத்தில் உணவாக இருந்தது மரவள்ளிக்கிழங்கு..! சத்துகள் அறிவோம்..!
tapioca in tamil-மரவள்ளிக்கிழங்கு (கோப்பு படம்)
Tapioca in tamil
மரவள்ளிக் கிழங்கு சாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். அதேபோலவே உலகம் முழுவதும் உணவுப்பஞ்சம் ஏற்பட்டபோதும் பல நாடுகளில் மரவள்ளிக்கிழங்கு மக்களுக்கு உணவாக இருந்தது.
மரவள்ளிக்கிழங்கு பலவகைகளாக சமைக்கப்படுகிறது. மேலும் உணவுக்கு பயனாவதுடன் இது மருத்துவ ரீதியான பயன்களும் இதில் உண்டு என்பது பலரும் அறியாத ஒன்றாகும். எனவே, அவற்றின் பயன் பற்றி பார்ப்போம்.
மரவள்ளிக்கிழங்கு என்பது மாவுச்சத்து நிறைந்த வேரில் இருந்தே பெறப்படும் ஒரு வகை கிழங்கு ஆகும். இது பொதுவாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இது யூக்கா அல்லது மணியோக் என்றும் அழைக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள மக்களுக்கு கார்போஹைட்ரேட்டின் முக்கிய ஆதாரமாக உள்ளது.
ஊட்டச்சத்து உள்ளடக்கம்
மரவள்ளிக்கிழங்கு பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். இதில் வைட்டமின் சி, தயாமின் (வைட்டமின் பி1), ரிபோஃப்ளேவின் (வைட்டமின் பி2), நியாசின் (வைட்டமின் பி3) ஆகியவை நிறைந்துள்ளன. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன.
Tapioca in tamil
பல்வேறு உணவாக
தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கு பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக வேகவைக்கப்படுகிறது. வேகவைக்கப்பட்டு ஒரு பக்க உணவாக வழங்கப்படுகிறது. இது சிப்ஸ், பொரியல் மற்றும் பிற தின்பண்டங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மரவள்ளி கிழங்கு அடை எனப்படும் மரவள்ளிக்கிழங்கு மாவில் செய்யப்பட்ட ஒரு வகை அப்பத்தை தயாரிக்கப் பயன்படுகிறது. ஜவ்வரிசி, சேமியா போன்றவைகளும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
பொருளாதார முக்கியத்துவம்
மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வணிகப் பயிராகவும் உள்ளது.
உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகும்.
Tapioca in tamil
பயன்கள்
1. மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றுகிறது. மேலும் உடலினை இக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இக்கிழங்கினை உட்கொள்வதன் மூலமாக நல்ல செரிமானத்தைப் பெறலாம்.
2. இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு வைட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது.
3.மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.
4. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது.
5. வயதாகும்போது நமது உடலில் உள்ள எலும்புகள் உறுதி குறைந்து நெகிழ்தன்மையை இழப்பதால் எலும்பின் , உறுதி, அடர்த்தி ஆகியவை குறைந்து விடுகின்றன. இதனால் ஆஸ்டியோபோரேஸிஸ் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.
மரவள்ளியில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் கே ஆகியவை எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே இக்கிழங்கினை உட்கொண்டு எலும்புகளின் ஆரோக்யத்தைப் பெறலாம்.
Tapioca in tamil
6.மரவள்ளியானது அதிகளவு கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இக்கிழங்கினை உண்டு பயன் பெறலாம்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu