/* */

பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிரை பாதுகாப்பது எப்படி?

காற்று வீசும் திசைக்கு எதிரே குச்சிகளால் முட்டு கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்கலாம்.

HIGHLIGHTS

பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிரை பாதுகாப்பது எப்படி?
X

திராட்சை கொடி - கோப்புப்படம் 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.

கொடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து விட வேண்டும். உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். திராட்சைக் கொடியில் போர்போப் பசையைப் பூச வேண்டும். அதிகப்படியான இலைதழைகளை கவாத்து செய்தல் வேண்டும். திராட்சைக் கொடிகளை பந்தல் அமைப்பில் நன்கு கட்ட வேண்டும்.

உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். காய்ந்து போன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.

காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ் கட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.

வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.

காய்கறி மற்றும் இதர தோட்டக் கலைப் பயிர்களுக்கான வழி முறைகள்

தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி, கத்தரி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாதவண்ணம் பாதுகாக்க வேண்டும்.

கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும். நிழல்வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நிழல்வலைக்குடில் மற்றும் பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும்.

Updated On: 31 Jan 2024 9:16 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி