சின்ன வெங்காய பயிர்களை தாக்கும் நோய்கள்: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
சின்ன வெங்காய சாகுபடியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஈரோடு தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்டுள்ள செய்தி குறி ப்பில் கூறியிருப்பதாவது:-
கொடுமுடி வட்டாரத்தில் ஆண்டு தோறும் 346 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ப்படுகிறது. விதை குமிழ்கள் (விதைக்காய்கள்) மூலமாகவே சின்ன வெங்காயம் பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். வெங்காயத்தை அடித்தாள் அழுகல் நோய், அடிச்சாம்பல் நோய், நுனிகருகல் நோய், வேர் அழுகல் நோய், வெ ள்ளை அழுகல் நோய், ஊதா கொப்புள நோய் போன்ற நோய்கள் தாக்குகின்றன.
எனவே, மேற்கண்ட நோய்களை கட்டுப்படுத்த கீழ்கண்ட பயிர் பாதுகாப்பு முறை களை விவசாயிகள் மேற்கொள்ள லாம்.
முதலாவதாக சின்ன வெங்காயம் நடவு செய்த 30வது நாளில் 2.5 கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸ் மற்றும் 2.5 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடியை நன்கு மக்கிய 250 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும். வெங்காயப் பயிரின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் நோய் பாதித்த செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து துவண்டு காய்ந்து விடுவதால் இதனை விவசாயிகள் கோழிக்கால் நோய் என்றழைக்கின்றனர்.
நோய் தாக்கப்பட்ட செடியின் வெங்காயம் மற்றும் வேர்கள் அழுகி காணப்படும். வெங்காய வயல்களில் நல்ல வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும். தகுந்த இடை வெளியில் வெங்காயம் நடவு செய்யப்பட வேண்டும். தண்ணீர் மற்றும் உரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி எறிந்து விட்டு அந்த இடத்தைச் சுற்றிலும் 0.25 சதவீதம் காப்பர் ஆக்ஸிகு ளோரைடு (அல்லது) 0.1 சதவீதம் காப்பர் ஹைட்ராக்சைடு கரைசலை மண்ணில் ஊற்ற வேண்டும். தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஏற்படும் பேக்டீரியல் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஸ்டெப்டோ சைக்கிளின் (0.2 மி.கி.) மருந்துடன் காப்பர் ஆக்சி குளோரைடு (2.5 மில்லி கிராம்) அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு (1 மில்லி கிராம்) மருந்தை கலந்து தெளிக்க வேண்டும்.
கோழிக்கால் நோய் மற்றும் ஊதா கொப்புள நோயை கட்டுப்படுத்த தேவையின் அடிப்படையில் மட்டுமே டெபுகோனசால் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மழை, பனிக்காலங்களில் ஏற்படும் அடி சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்ட ர் தண்ணீருக்கு 1 மில்லி ரிடோமில் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற அளவில் 7 நாள்கள் இடைவெ ளியில் 2 முறை தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லி டீபால் போன்ற ஒட்டும் திரவம் கலந்து தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu