நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி
இதுகுறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் செல்வராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில், கால்நடை உணவியல் துறை அமைந்துள்ளது. இதில் பன்னாட்டு மேம்பாட்டுத்துறை நிதி உதவியுடன் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 30 நபர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி முகாமில் நாட்டுக்கோழி இனங்கள் மற்றும் அமைப்பு, கோழிகளுக்கு கலப்புத் தீவனம் தயாரித்தல் மற்றும் தரமறிதல், குடிநீர் மேலாண்மை, நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ முறைகள், குடற்புழு நீக்கம், தடுப்பூசி அளித்தல், நாட்டுக்கோழி பண்ணைகளில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும், பண்ணைப் பொருளாதாரம், வங்கிக் கடனுதவி மற்றும் கோழி வளர்ப்புக்கான மானியத்திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மற்றும் கோழியின நிபுணர்களால் பயிற்சி நடத்தப்படுகிறது.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு. கையேடு, உணவு மற்றும் இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் 3 நாட்கள் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பும் உள்ளோர் கல்லூரியை அனுகி முன் பதிவு செய்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu