விவசாயிகளுக்கு வேளாண் கருவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவியர்

எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவியர் செயல் விளக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியைச் சார்ந்த நான்காம் ஆண்டு மாணவிகளான ரங்கீலா, ராஜாத்தி, சுபஸ்ரீ மற்றும் சபிதா ஆகியோர் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், கொட்டாகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் குறித்த திட்டங்களையும் மானியங்களையும் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் வேளாண்மை இயந்திரமயமாக்குதலை மையமாக வைத்து விவசாயிகளிடம் மாணவி ரங்கீலா எடுத்துரைத்தார். இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட "இ-வாடகை" என்னும் திட்டத்தை மாணவி விவசாயிகளுக்கு விளக்கினார்.
மேலும் விவசாயிகளுக்கு மானியத்தில் மின் மோட்டார் பம்புசெட் வழங்கும் திட்டம், துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல் திட்டம், நில மேம்பாட்டு இயந்திரங்கள் மற்றும் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வினியோகம் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வேளாண் இயந்திர திட்டங்கள் குறித்த இலை கோப்புறையை மாணவி விவசாயிகளுக்கு வழங்கினார். இதில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu