மணிலா சாகுபடி செய்யும் விவசாயியா? வேளாண்துறை அட்வைஸ் இதுதான்
தர்மபுரி மாவட்டத்தில், மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் என்று, விதைப்பரிசோதனை அலுவலர் ரவி அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தர்மபுரி மாவட்டத்தில் மணிலா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டுளளனர். எனவே. மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள் விதைச்சான்று துறையால் சான்று அளிக்கப்பட்ட சான்று அட்டை பொருந்திய விதைகளை பயன்படுத்த வேண்டும். விதை முளைக்கும் போது பூச்சி நோய் தாக்குதல் இன்றி நன்கு முளைத்து செழிப்புடன் வளர, அதிக விளைச்சல் பெறுவதற்கு தரமான விதைகளை விதைப்பது அவசியமாகும். தரமான விதை என்பது முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும்.
இந்த தர நிர்ணயங்கள், ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்க நல்ல முளைப்புத்திறன் வேண்டும். விதைகளை சேமிக்கும் போது, பூச்சிநோய் தாக்குதல் முளைப்பு திறன் கெடாமல் நீண்ட நாட்கள் சேமிக்க விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. இதற்கு விதைப்பரிசோதனை அவசியமானது. மேலும். தங்கள் வீடுகளில் சேமித்து வைத்துள்ள மணிலா விதைகளை பயன்படுத்தும் நிலை இருந்தால், விதைகளின் ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதன் மூலம், கூடுதல் மகசூல் பெற முடியும்.
தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால், சேமித்து வைத்திருக்கும் மணிலா விதையில், ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஆதனால், குறைந்தபட்ச முளைப்புத்திறன் 70 சதவிகிதத்தைவிட குறைந்திருக்கும். எனவே, தங்களிடம் உள்ள மணிலா விதைகளை ஒரு கிலோ அளவில், விதை மாதிரிகளை எடுத்து, பரிசோதனை செய்து கொள்ளலாம்.
மேலும் விதைப்பரிசோதனை செய்ய விரும்பம் விவசாயிகள், விதை மாதிரிகளை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்கள் விதைக்குவியலில் மாதிரி ஒன்று எடுத்து, அதில் பயிர், ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை விவரம் குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்து, கட்டணமாக ரூ.30 செலுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே செயல்படும் தர்மபுரி விதைப்பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்பு திறனை தெரிந்து சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu