இலை சுருட்டுப்புழு தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை

இலை சுருட்டுப்புழு தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை
X

இளங்காடு கிராமத்தில், கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல் தடுப்பு குறித்து, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய, வேப்பங்குளம் வேளாண் விஞ்ஞானி சுருளிராஜன்.

இளங்காடு கிராமத்தில், சம்பா சாகுபடியில் இலை சுருட்டு புழு தாக்குதல் தடுப்பு குறித்து, விவசாயிகளுக்கு, வேப்பங்குளம் வேளாண் விஞ்ஞானி சுருளிராஜன் ஆலோசனை வழங்கினார்.

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் 4400 மீட்டருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டு, தற்போது துரிதமாக அறுவடை நடைபெற்று வருகிறது. இளங்காடு சிரமேல்குடி சுற்றியுள்ள கிராமங்களில், அறுவடை நெருங்கும் தருணத்தில் உள்ள நெல் பயிரில், கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல் அதிகளவில் தென்படுவதாக, விவசாயிகளிடம் இருந்து புகார் வந்தது.

அதை தொடர்ந்து, வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் துணை இயக்குனர், அட்மா திட்டம் பாலசரஸ்வதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சுருளிராஜன் உள்ளிட்டோர், இளங்காடு கிராமத்தில் விவசாயிகளின் வயலில், பொருளாதார சேதநிலைக்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.

மேலும், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு பணிகளான வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பது, அசாடிராக்டின் 10000 - பிபிஎம் கரைசல் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். 10 கிலோ வசம்பு தூளை, காலையில் பணிப்புலத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு வார இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு, விஞ்ஞானி சுருளிராஜன் ஆலோசனை வழங்கினார்.

கள ஆய்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலர் சுகிதா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!