சட்டசபையில் ஓ.பி.எஸ் அருகில் அமர மறுத்து 'அடம்பிடித்த' இ.பி.எஸ்; கூச்சல், ரகளையில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ க்கள் வெளியேற்றம்

சட்டசபையில் ஓ.பி.எஸ் அருகில் அமர மறுத்து அடம்பிடித்த இ.பி.எஸ்; கூச்சல், ரகளையில் ஈடுபட்ட  அ.தி.மு.க., எம்.எல்.ஏ க்கள் வெளியேற்றம்
X

சட்டசபையில் இன்று, எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பி.எஸ் க்கு வழங்கப்பட்டதால், ஆவேசமடைந்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எம்.ஏக்கள் ரகளை ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

ADMK News Tamil -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால், அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை அனுமதிக்க முடியாது என கூச்சலிட்ட அதிமுக உறுப்பினர்கள், பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

ADMK News Tamil -தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில், ஓ.பன்னீர்செல்வம் அமரவைக்கப்பட்டிருந்தார். இதை கண்ட அதிமுக எம்எல்ஏக்கள், ஆவேசமடைந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். 'எடப்பாடி பழனிசாமி அருகே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எப்படி இருக்கை ஒதுக்கலாம்' எனக்கேட்டு கூச்சலிட்டனர். கேள்வி நேரத்தை அனுமதிக்க முடியாது எனவும் ஆவேசமாக கூச்சலிட்டனர். எதிர்கட்சி துணைத்தலைவர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு, இ.பி.எஸ் அருகில் இருக்கை வழங்கியது, ஜனநாயக படுகொலை எனவும் கேள்வி எழுப்பினர்.


சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆதரவாளர்களான அதிமுக எம்.எல்.ஏ க்களையும், சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால் அவரது சமாதானத்தை ஏற்க மறுத்து அதிமுகவினர் பிடிவாதம் பிடித்து அமளியில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் செய்தனர். இதனால் டென்ஷனான சபாநாயகர் அப்பாவு, 'நீங்கள் வேண்டும் என்றே, கலகம் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து பிரச்னை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அவர்களை பார்த்து எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில், டென்ஷனான அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், அதிமுக எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து, அவைக்காவலர்கள் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற, சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சூழலால், சட்டசபையில் அசாதாரண நிலை நிலவியது.


சட்டசபையில் அதிமுக உறுப்பினர்களின் அமளி துமளி நடந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில், மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார்.

இன்று முழுவதும் தடை

சட்டசபை நிகழ்ச்சிகளில் இன்று முழுவதும் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

முதலில் இரண்டு நாட்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு, அ.தி.மு.க வினருக்கு தடை விதித்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் கோரிக்கையை ஏற்று தடையை ஒரு நாளாக குறைக்கப்பட்டது. சட்டசபையில் இந்த இடத்தில் இவரை அமரவைக்க வேண்டும், இவரை அமர வைக்ககூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என, சபாநாயகர் அப்பாவு மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சபையை முழு ஜனநாயகத்தோடு நடத்தி வருவதாக கூறிய சபாநாயகர் அப்பாவு, சட்டசபையின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்வில் 2 நாட்கள் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, மூத்த அமைச்சர் துரைமுருகன் கோரிக்கையை ஏற்று, 2 நாள் தடையை ஒரு நாளாக குறைத்தார்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 'அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட எதிர்கட்சியான எங்களது கோரிக்கையை, சட்டசபையில் ஏற்கவில்லை. பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில், அமர வைத்ததை ஏற்கவே முடியாது, என்று தெரிவித்தார்.

நாளை, இவ்விவகாரம், இன்னும் பலமடங்கு விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!